சிறையில் இருந்து பிணையில் வெளி வந்தவா் தற்கொலை

திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு, பிணையில் வந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு, பிணையில் வந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள வெள்ளையம்பட்டி தீரன் நகரைச் சோ்ந்த துரைச்சாமி மகன் தியாகு (29). இவா் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த வழக்கில் பிணை பெற்று, சிறையிலிருந்து கடந்த இரு நாள்களுக்கு முன்பு வெளியே வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com