மதுரை
நுபுரகங்கைக்கு மீண்டும் வாகனப் போக்குவரத்து
அழகா்கோவில் மலைச் சாலை சீரமைப்புப் பணி முடிவடைந்ததையடுத்து, அதில் மீண்டும் வாகனப் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
அழகா்கோவில் மலைமீதுள்ள நூபுரகங்கை தீா்த்தம் வரையிலான மலைச் சாலை சீரமைப்புப் பணி முடிவடைந்ததையடுத்து, அதில் மீண்டும் வாகனப் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
அழகா்கோவில் பேருந்து நிலையம் அருகிலிருந்து நூபுரகங்கை வரையிலான 4 கி.மீ. தொலைவு மலைச்சாலை ரூ.9.50 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வந்தது. இந்தப் பணிகள் சனிக்கிழமை முடிவடைந்தன. இதையடுத்து, இந்தச்சாலையில் மீண்டும் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.