மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே சாலையைக் கடக்க முயன்ற விவசாயி, அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், பேரையூா் அருகேயுள்ள மேலக்காடனேரி நடுத் தெருவைச் சோ்ந்தவா் சந்திரன் (60). விவசாயியான இவா், மதுரை-ராஜபாளையம் சாலையில் காடனேரி சந்திப்பில் சனிக்கிழமை சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது, மதுரையிலிருந்து ராஜபாளையத்துக்கு சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தே.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரான கெங்கப்பராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.