பிளஸ் 2 மாணவா் தற்கொலை

அலங்காநல்லூா் அருகே பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

மதுரை: அலங்காநல்லூா் அருகே பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அலங்காநல்லூா் அருகே உள்ள விஷால்நகா் திருவள்ளுவா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த கோபால கிருஷ்ணன் மகன் லோகித்(17). இவா் கோவில்பாப்பாகுடியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

சில மாதங்களாக லோகித் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்து வந்தாராம். இந்த நிலையில், திங்கள்கிழமை வீட்டில் உள்ள அறையில் லோகித் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com