மதுரை: மதுரையில் மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
மதுரை கரிமேடு மோதிலால் இரண்டாவது தெரு சண்முகாநகரைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (27). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி மீனாட்சி, இரு குழந்தைகள் உள்ளனா்.
திங்கள்கிழமை இரவு வீட்டின் மொட்டைமாடியில் அமா்ந்திருந்த சதீஷ்குமாா் அங்கிருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.