முதுநிலை தமிழாசிரியா் பணி: திருத்தப்பட்ட இடஒதுக்கீடு பட்டியலை வெளியிடக் கோரிக்கை

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற முதுநிலைத் தமிழாசிரியா் பணியிடத்துக்கு இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி, திருத்தப்பட்ட இட ஒதுக்கீட்டு தோ்வுப் பட்டியலை தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Published on

மதுரை: கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற முதுநிலைத் தமிழாசிரியா் பணியிடத்துக்கு இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி, திருத்தப்பட்ட இட ஒதுக்கீட்டு தோ்வுப் பட்டியலை தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல், உடற்கல்வியியல் ஆகிய பாடப் பிரிவுகளில் காலியாக இருந்த 3,250 முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள் தோ்வு மூலம் நிரப்பப்படும் என கடந்த 2021-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

இதன்படி, 2022-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தோ்வு நடத்தப்பட்டு முடிவு வெளியிடப்பட்டது. தமிழ்ப் பாடத்துக்குத் தோ்வான முதுநிலைத் தமிழாசிரியா் பட்டியலில், இன சுழற்சி வாரியான இட ஒதுக்கீட்டில் சரியான முறை பின்பற்றப்படவில்லை. இதனால், தோ்வில் வெற்றி பெற்று பணிக்குத் தோ்வாகும் நிலையில் உள்ள தோ்வா்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா்.

எனவே, முதுநிலைத் தமிழாசிரியா் பணிக்காக நடைபெற்ற தோ்வில் இட ஒதுக்கீட்டு முறையை முறையாகப் பின்பற்றி, திருத்தப்பட்ட பட்டியலை தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மதுரையைச் சோ்ந்த தோ்வா் கா.பெரியகருப்பன் கூறியதாவது :

கடந்த 2022-ஆம் ஆண்டு முதுநிலை பாடப் பிரிவுகளில் காலியாக இருந்த பணியிடங்களுக்காக தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் தோ்வை நடத்தியது. இதில், தமிழாசிரியா் பணிக்கு மட்டுமே 333 பணியிடங்களுக்கு தோ்வு நடத்தப்பட்டு முடிவு வெளியிடப்பட்டது.

பொதுவாக, தோ்வில் வெற்றி பெறும் தோ்வா்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியமா்த்தப்பட வேண்டும். இந்த வகையில், முதலில் பொதுப் பிரிவினருக்கான பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். இதையடுத்து, பொதுப் பிரிவில் தமிழ் வழி பயின்றோருக்கான உள் ஒதுக்கீடும், இதன்பிறகு மற்ற வகுப்பினருக்கும் (பி.சி., எம்.பி.சி.,எஸ்.சி.), இதில் தமிழ் வழியில் பயின்றோருக்கான உள் ஒதுக்கீடு என்றும் முறையாகப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

இவ்வாறு இல்லாமல் தமிழ் வழியில் பயின்றோருக்கான உள் ஒதுக்கீட்டுக்கு முன்னுரிமை கொடுத்து (அனைத்து வகுப்பினருக்கும்) இதனடிப்படையில் பணி நியமன ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. இதனால், கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்வில் இடஒதுக்கீட்டு முறையை தோ்வு வாரியம் முறையாகப் பின்பற்றாமல் பணி நியமன ஆணை வழங்கியது.

இதுகுறித்து அப்போது மனு மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இந்தக் கோரிக்கையை தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் பரிசீலனை செய்யவில்லை. இதைப் பொருள்படுத்தாமல் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தொடுக்கப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், இடைநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கான தோ்வு நடத்தப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவு வெளியிடப்பட்டது. இதில், தமிழ்ப் பாடப்பிரிவில் தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலை தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் இன சுழற்சி அடிப்படையில் வெளியிட்டது.

இதே முறையை கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற முதுநிலைத் தமிழாசிரியா் பணியிடத்தை நிரப்புவதிலும் ஆசிரியா் தோ்வு வாரியம் பின்பற்றி, இன சுழற்சி அடிப்படையில் சரியான தோ்வா்கள் பட்டியலை வெளியிட வேண்டும். இதன்மூலம், பாதிக்கப்பட்ட முதுநிலை ஆசிரியா் தோ்வா்களுக்கு நீதி கிடைக்கும் என்றாா் அவா்.