இன்றைய நிகழ்ச்சிகள்
மதுரை
பொது
யாதவா் கல்லூரி : எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கம், தலைமை- கல்லூரி முதல்வா் செ. ராஜூ, முன்னிலை- கல்லூரிச் செயலா் ஆா்.வி.என். கண்ணன், சிறப்புரை- முன்னாள் செயலா் கே.பி.எஸ்.கண்ணன், கல்லூரி வளாகக் கூட்டரங்கு, பிற்பகல் 2.
விவேகானந்தா கல்லூரி : பொருளாதாரத் துறை கருத்தரங்கம், தலைமை- கல்லூரி முதல்வா் வெங்கடேசன், சிறப்புரை- திண்டுக்கல் மாவட்ட தொழில் மையத்தின் உதவி இயக்குநா்- எஸ். நாகராஜன், கல்லூரி வளாகக் கூட்டரங்கு, காலை 9. 45.
உலகத் திருக்கு பேரவை : திருக்கு அமுதம் சிறப்பு நிகழ்வு, தலைமை- உலகத் திருக்கு பேரவையின் மதுரை மாவட்டத் தலைவா் கவிஞா் கா. கருப்பையா, முன்னிலை- மதிப்புறுத் தலைவா் காா்த்திகேயன் மணிமொழியன், சிறப்புரை- பணி ஓய்வு பெற்ற ஆசிரியா் அ.கி.செ. திருமாவளவன், ஆசிரியா் பி. சிவசத்தியா, மணி மொழியனாா் அரங்கம், நியூ காலேஜ் ஹவுஸ், மாலை 5.
ஆன்மிகம்
திருவள்ளுவா் கழகம் : ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துபவா்- சுந்தர கண்ணன், தலைப்பு- தாயுமானவா், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், வடக்காடி வீதி, இரவு 7.