புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தா்கள்.
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தா்கள்.

புரட்டாசி முதல் சனி; பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்: திரளான பக்தா்கள் தரிசனம்

மதுரை, அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
Published on

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மேற்கொள்ளும் பெருமாள் வழிபாடு, சகலவிதமான கஷ்டங்களையும் நீக்கி, வளமான வாழ்வு அளிக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை. இதன்படி, மதுரை, அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட 108 வைணவத் தலங்களில் ஒன்றான கூடலழகா் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை அதிகாலை மூலவா் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பிறகு, உற்சவா் வியூக சுந்தரராஜப் பெருமாள், தாயாருக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இந்தக் கோயிலில் அதிகாலை முதலே திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி , தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த கூடலழகா் பெருமாள் கோயில் வியூக சுந்தரராஜப் பெருமாள்.  2. திருமோகூா்  காளமேகப் பெருமாள் கோயில் வழித்துணைப் பெருமாள். 3.  திருமலைநாயக்கா் மகால் அருகேயுள்ள அனுமன் கோயிலில் அனுமந்த வாகனத்தில் காட்சியளித்த  ஸ்ரீராமா்.

இதேபோல, தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

சிறப்பு தரிசனம், பொது தரிசனம் ஆகிய 2 வரிசைகளிலும் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

மதுரை மதனகோபால பெருமாள் கோயில், தல்லாகுளம் நவநீதகிருஷ்ணன் கோயில், திருப்பாலை கிருஷ்ணன் கோயில், பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயில், யா.ஒத்தக்கடை நரசிங்கப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்தக் கோயில்களில் திரளான பக்தகா்கள் காலை, மாலை இருவேளைகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com