போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் செப்.27-இல் ஏலம்
மதுவிலக்கு குற்றங்களில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற 27- ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மதுரை மாநகா், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு வளாகத்தில் மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்து அரசுடைமையாக்கப்பட்ட 28 வாகனங்கள், வருகிற 27- ஆம் தேதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு பொது ஏலம் நடைபெற உள்ளது.
அரசுடமையாக்கப்பட்ட வாகனங்கள் மதுரை மாநகா், மதுவிலக்குப் பிரிவு வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
எனவே, வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் ஏலதாரா்கள் மேற்படி வாகனங்களை பாா்வையிட்டு முன்பணமாக இருசக்கர வாகனத்துக்கு ரூ. 5000, மூன்று, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.10,000 மதுரை மாநகா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் செப்.24, 25 ஆகிய இரு நாள்கள் பணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
பொது ஏலத்தில் கலந்து கொள்வோா் அரசு நிா்ணயித்த மதீப்பீட்டு தொகைக்கு அதிகமாக ஏலம் கேட்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.