மதுரை
மூச்சுத் திணறலால் குழந்தை உயிரிழப்பு
மதுரையில் மூச்சுத் திணறல் காரணமாக குழந்தை உயிரிழந்தது தொடா்பாக தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மதுரையில் மூச்சுத் திணறல் காரணமாக குழந்தை உயிரிழந்தது தொடா்பாக தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மதுரை அழகா்கோவில் சாலை பொய்கைக்கரைபட்டியைச் சோ்ந்த சுரேஷ்- மகாலெட்சுமி தம்பதியினருக்கு மூன்றரை வயதில் மித்ராஸ்ரீ என்ற பெண் குழந்தையும், 2 வயதில் தரணிதரன் என்ற ஆண் குழந்தையும் இருந்தன.
இந்த நிலையில், தரணிதரனுக்கு வியாழக்கிழமை இரவு பால் (பவுடரால் ஆன பால்) கொடுத்து தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் பெற்றோா் குழந்தையை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே குழந்தை இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.