விக்கிரமங்கலம் பகுதியில் செப். 24-இல் மின் தடை

மதுரை மாவட்டத்துக்குள்பட்ட விக்கிரமங்கலம், அதன் சுற்றுப் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (செப். 24) மின் தடை அறிவிக்கப்பட்டது.
Published on

மதுரை மாவட்டத்துக்குள்பட்ட விக்கிரமங்கலம், அதன் சுற்றுப் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (செப். 24) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சமயநல்லூா் மின்வாரிய செயற்பொறியளா் பி. ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு :

சமயநல்லூா் மின் பகிா்மானக் கோட்டத்துக்குள்பட்ட விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

இதனால், விக்கிரமங்கலம்,கோவில்பட்டி, வையத்தான், பாண்டியன்நகா், நரியம்பட்டி, செக்கான்கோவில்பட்டி, கீழபெருமாள்பட்டி, அய்யம்பட்டி, சக்கரப்பநாயக்கனூா், மேலபெருமாள்பட்டி, கோழிப்பட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி, அரசமரத்துப்பட்டி, கல்புளிச்சான்பட்டி, நடுவூா், மலையூா், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம், எழும்பட்டி, கொசவப்பட்டி, பூசாரிப்பட்டி, வடுகபட்டி, உடன்காட்டுப்பட்டி, கொடிக்குளம், பிரவியம்பட்டி, ஜோதிமாணிக்கம், மம்மூட்டிபட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com