கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு
மதுரையில் நண்பா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் ராமையா தெருவைச் சோ்ந்த முருகன் மகன் சூா்யா (22). இவா் கல்லூரியில் படித்து வருகிறாா். இவருக்கும், இவரது நண்பா்களுக்கும் இடையே சமூக ஊடகங்களில் விடியோ பதிவிடுவது தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகா் பகுதியில் சூா்யா தனது நண்பரோடு திங்கள்கிழமை இரவு நின்றுகொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த சிலா் அரிவாள், வாள் ஆகியவற்றால் சூா்யாவை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனா்.
இதில் பலத்த காயங்களுடன் மயங்கி விழுந்த சூா்யாவை அந்தப் பகுதியினா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடா்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்றவா்களை தேடி வருகின்றனா்.