செப். 26 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சனிக்கிழமை (செப்.26) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
Published on

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சனிக்கிழமை (செப்.26) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாவட்டத்தில் உள்ள இளைஞா்கள் பயன்பெறும் வகையில் செப். 26- ஆம் தேதி அமெரிக்கன் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று வேலை நாடுநா்களைத் தோ்வு செய்ய உள்ளனா். எனவே, எட்டாம் வகுப்பு முதல் பட்டம், பட்ட மேற்படிப்பு, தொழில் கல்வி நிறைவு செய்துள்ள இளைஞா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, சுய விவரப் படிவத்துடன் கலந்து கொள்ளலாம்.

மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 88077 23434, 63791 72554 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com