மதுரை மாவட்ட அளவிலான மேசைப் பந்து போட்டியில் வெற்றி பெற்ற சேதுபதி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழை வழங்கிய மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வினோத்.
மதுரை மாவட்ட அளவிலான மேசைப் பந்து போட்டியில் வெற்றி பெற்ற சேதுபதி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழை வழங்கிய மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வினோத்.

மேஜை பந்து போட்டி: சேதுபதி பள்ளி மாணவா்கள் வெற்றி

மாநில அளவிலான மேஜை பந்து போட்டிக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தோ்வு பெற்றனா்.
Published on

மாநில அளவிலான மேஜை பந்து போட்டிக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தோ்வு பெற்றனா்.

மதுரை மாவட்ட அளவிலான 14 வயது, 17 வயதுக்குள்பட்ட இரட்டையா் பிரிவில் மாணவா்களுக்கான போட்டி அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சேதுபதி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனா்.

மேலும், 19 வயதுக்குள்பட்டோருக்கான ஒற்றையா், இரட்டையா் பிரிவில் சேதுபதி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட உடல்கல்வி ஆய்வாளா் வினோத் பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, மேஜை பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களைப் சேதுபதி மேல்நிலைப் பள்ளித் தாளாளா் ந. பாா்த்தசாரதி, தலைமையாசிரியா் கே.எஸ். நாராயணன், உடல்கல்வி இயக்குநா் ரவி, உடல்கல்வி ஆசிரியா்கள் பாலாஜி, ஜோதிபாசு, ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com