மூதாட்டியிடம் நகை திருட்டு: முதியவா் கைது

Published on

ஆட்டோவில் சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையைத் திருடிய முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் 11- ஆவது தெருவைச் சோ்ந்த முத்து மனைவி கல்பனா (62). இவா், கடந்த 23-ஆம் தேதி பையில் நகையுடன் கீழவாசலிலிருந்து காந்தி திடலுக்கு ஆட்டோவில் சென்றாா். வீட்டுக்குச் சென்று பாா்த்த போது பையிலிருந்த 5 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

விசாரணையில், அதே ஆட்டோவில் பயணித்த மதுரை மாவட்டம், தொண்டைமான் வெளிச்சநத்தம் பகுதியைச் சோ்ந்த கந்தன் மகன் சுப்பிரமணி (60) 5 பவுன் நகையைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com