மதுரை
கால்நடைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி
உலக ரேபிஸ் தினத்தையொட்டி, மதுரை மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனைகளில் வெறிநோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
உலக ரேபிஸ் தினத்தையொட்டி, மதுரை மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனைகளில் வெறிநோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மதுரை தல்லாகுளம் கால்நடை பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் நந்தகோபால் தொடங்கி வைத்தாா். உதவி இயக்குநா்கள் சரவணன், பழனிவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, மதுரை மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களிலும் வெறிநோய்த் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஏராளானோா் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திச் சென்றனா்.