மதுரை
குளத்தில் மூழ்கியதில் கல்லூரி மாணவி உயிரிழப்பு
மேலூர் அருகே சனிக்கிழமை குளத்தில் குளிக்கச் சென்ற மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மேலூர் அருகே சனிக்கிழமை குளத்தில் குளிக்கச் சென்ற மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள வெள்ளரிப்பட்டியைச் சோ்ந்த விவசாயி வீரையா மகள் முருகேஸ்வரி (18). ஒத்தக்கடை அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தாா்.
கல்லூ விடுமுறை என்பதால், தோழியா்களுடன் அங்குள்ள குளத்தில் குளிக்கச் சென்றாா்.
நீச்சல் தெரியாத நிலையில் குளத்தில் ஆழமான பகுதிக்குச் சென்ற அவா், நீரில் மூழ்கி உயிரிழந்தாா். உடனே அந்தப் பகுதி மக்கள் குளத்துக்குள் சென்று அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.