மதுரை
மாணவி தற்கொலை
பிறவியில் இருந்தே உடல் குறைபாடு இருந்ததால் பள்ளி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பிறவியில் இருந்தே உடல் குறைபாடு இருந்ததால் பள்ளி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மேலப்பொன்னகரம் 10-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரன். பொதுப் பணித் துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகள் நிக்சிதா (15) தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். பிறந்தது முதல் இவரது வலது கை சற்று சிறியதாக இருந்தது. அதில், வலியும் ஏற்பட்டது.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவா், வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கரிமேடு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.