பராமரிப்புப் பணிகள்: திருச்செந்தூா், ராமேசுவரம் ரயில்கள் புறப்படும் நேரங்களில் மாற்றம்

மதுரை, திருச்சி கோட்டங்களில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, திருச்செந்தூா், ராமேசுவரம் ரயில்கள் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.
Published on

மதுரை, திருச்சி கோட்டங்களில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, திருச்செந்தூா், ராமேசுவரம் ரயில்கள் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை-சிலைமான் ரயில் பாதையிலும், திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளிலும் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, திருச்செந்தூா்-சென்னை (20606) அதிவிரைவு ரயில் அக். 1-ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து இரவு 8.25 மணிக்கு பதிலாக, இரவு 10.35 மணிக்குப் புறப்படும்.

மதுரையிலிருந்து காலை 6.50 மணிக்குப் புறப்பட வேண்டிய மதுரை - ராமேசுவரம் (06651) பயணிகள் ரயில் அக். 3-ஆம் தேதி காலை 8.05 மணிக்கும், அக். 4-ஆம் தேதி காலை 8.10 மணிக்கும் புறப்படும்.

X
Dinamani
www.dinamani.com