மதுரை
வியாபாரி தற்கொலை
தொழிலில் இழப்பு ஏற்பட்டதால், உசிலம்பட்டியில் முறுக்கு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தொழிலில் இழப்பு ஏற்பட்டதால், உசிலம்பட்டியில் முறுக்கு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மருதுநகரைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (32). இவா் தனது உறவினருடன் சோ்ந்து கா்நாடக மாநிலத்தில் முறுக்கு வியாபாரம் செய்து வந்தாா். அங்கு தொழிலில் இழப்பு ஏற்பட்டதையடுத்து தனது உறவினா்களிடம் கடன் பெற்று மீண்டும் தொழில் செய்தாா். அதிலும் இழப்பு ஏற்பட்டதால் கடன் தொல்லைக்கு ஆளானாா்.
இதனால் மன வேதனையடைந்த சதீஷ்குமாா் உசிலம்பட்டியில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்தாா். அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து உசிலம்பட்டி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.