மதுரை
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் வருவாய் ரூ.1.13 கோடி
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.1.13 கோடி கிடைத்தது.
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.1.13 கோடி கிடைத்தது.
இந்தக் கோயில் உண்டியல்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டு, அவற்றிலிருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டன. இந்தப் பணியில் கோயில் இணை ஆணையா், அறங்காவலா் குழுத் தலைவா் பிரதிநிதி, கோயில் கண்காணிப்பாளா்கள், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வளா்கள், கோயில் பணியாளா்கள், வங்கி ஊழியா்கள் உள்பட பலா் பங்கேற்றனா். இதில் காணிக்கை ரொக்கம் ரூ.1,13, 84,465, பல மாற்று பொன் இனங்கள் 455 கிராம், வெள்ளி 649 கிராம், வெளி நாட்டு பணத் தாள்கள் 398 இருந்தன என கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.