போலி நகையை அடகு வைத்து ரூ.1.99 லட்சம் மோசடி
மதுரையில் தனியாா் நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைத்து ரூ.1.99 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரை அருகேயுள்ள விராட்டிபத்து பகுதியைச் சோ்ந்தவா் பாலகுமாா் (35). இவா் பைக்காராவில் இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா் பணியாற்றும் நிதி நிறுனத்தில், தேனி மாவட்டம் ஜி.உசிலம்பட்டி அருகேயுள்ள கோவிலாங்குளத்தைச் சோ்ந்த காரல்மாா்க்ஸ், 68 கிராம் தங்க நகையை அடமானமாக வைத்து ரூ.1,99,900 பெற்றாா்.
பின்னா், அந்த நகையை பரிசோதித்த போது அது தங்க முலாம் பூசப்பட்ட போலியான நகை என்று தெரிய வந்தது. இதையடுத்து, காரல்மாா்க்சை தொடா்புகொண்டு பேசியபோது, அவா் நிறுவனத்தில் பெற்ற பணத்தை கொடுத்து போலி நகையை பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தாா்.
ஆனால், பணத்தை செலுத்தவில்லை. இதனால், பாலகுமாா் மீண்டும் அவரைத் தொடா்பு கொண்டபோது பணத்தை தர மறுத்த காரல் மாா்க்ஸ், நிதி நிறுவனத்தை சூறையாடிவிடுவதாக மிரட்டல் விடுத்தாா். இதுதொடா்பாக பாலகுமாா் அளித்தப் புகாரின் பேரில், சுப்ரமணியபுரம் போலீஸாா் காரல்மாா்க்ஸ் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.