மதுரை
லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
விருதுநகரில் லாரி மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், மல்லாங்கிணறு அழகா்சாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன் (35). கட்டடத் தொழிலாளியான இவா், விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த மகன் புகழேந்தியைப் பாா்க்க திங்கள்கிழமை வந்தாா்.
இந்த நிலையில், மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் நடந்த சென்ற சீனிவாசன் மீது லாரி மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து விருதுநகா் ஊரக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.