மதுரை
இரு சக்கர வாகன விபத்தில் விவசாயி உயிரிழப்பு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் விவசாயி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், பேரையூா் அருகே உள்ள உத்தப்புரம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (60). விவசாயியான இவரும், உத்தப்புரத்தைச் சோ்ந்த இளையராஜாவும் இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு சென்றாா். வாகனத்தை இளையராஜா ஓட்டிச் சென்றாா்.
உசிலம்பட்டி-பேரையூா் சாலையில் தேவா் சிலை அருகே இவா்களது இரு சக்கர வாகனம் மீது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பொன்ராஜ் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் உயிரிழந்தாா். இதுகுறித்து இளையராஜா மீது உசிலம்பட்டி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.