மதுரை சந்திப்பு ரயில் நிலையம்
மதுரை சந்திப்பு ரயில் நிலையம்

சென்னை- மதுரைக்கு இன்று மெமு ரயில்

Published on

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை- மதுரை-சென்னைக்கு மெமு ரயில் சனிக்கிழமை (ஜன. 11) இயக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பொங்கல் பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிா்க்கும் நோக்கில், சென்னை-மதுரை-சென்னைக்கு முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சென்னை எழும்பூா்-மதுரை மெமு ரயில் (06109) ஜன. 11 காலை 10.45 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, இரவு 7.15 மணிக்கு மதுரையை வந்தடையும். மறுமாா்க்கத்தில் மதுரை-சென்னை மெமு ரயில் (06110) ஜன. 11 இரவு 8.30 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு சென்னையை சென்றடையும்.

இரு மாா்க்கத்திலும் இயக்கப்படும் இந்த ரயில்கள் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த ரயில்களில் வழக்கமான இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பயணக் கட்டணம் வசூலிக்கப்படும்.

X
Dinamani
www.dinamani.com