சீரற்ற இருதயத் துடிப்பை கட்டுப்படுத்த புதிய முறை

சீரற்ற வேகமான இருதயத் துடிப்பை கட்டுப்படுத்த மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் ‘கிரையோ அப்லேஷன்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
Published on

சீரற்ற வேகமான இருதயத் துடிப்பை கட்டுப்படுத்த மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் ‘கிரையோ அப்லேஷன்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து வேலம்மாள் மருத்துவமனையின் இருதயவியல், கேத் லேப் ஆய்வகங்களின் இயக்குநா் டாக்டா் பொ. சண்முகசுந்தரம் தெரிவித்ததாவது:

தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் ‘கிரையோ அப்லேஷன்’ செயல்முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்த செயல்முறை, வேகமான இருதயத் துடிப்பை ஏற்படுத்தும் ‘ஏட்ரியல் பைப்ரிலேஷன்’ எனப்படும் ‘அரித்மியாவால்’ பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மிகச் சிறந்த பலனை அளிக்கிறது.

இருதயம் வேகமாக துடித்தல், மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி, மயக்கம் போன்ற அறிகுறிகளுக்கு, இருதய மேல் அறை பாதிப்பு காரணமாக இருக்கலாம். இதுபோன்ற அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு இயல்பான இருதயத் துடிப்பை மீட்டெடுப்பதில் இந்த செயல்முறை மிகச் சிறந்த பலனை அளிக்கிறது.

ஒரு மெல்லிய நெகிழ்வான குழாய் செலுத்தப்பட்டு, பிரச்னைக்குரிய செல்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த செல்களை உறைய வைக்கும் வகையில் இந்த செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள செயல்முறைகளுடன் ஒப்பிடுகையில், ‘கிரையோ அப்லேஷன்’ செயல்முறை மிகவும் பாதுகாப்பானதாகவும், விரைவில் குணமளிக்கக் கூடியதாகவும் அறியப்படுகிறது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com