மதுரை மாவட்டம், மருதங்குடி அரசு உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்க் கூடல் விழாவில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் கே.எஸ். நாராயணன்.
மதுரை
பள்ளியில் தமிழ்க் கூடல் விழா
மதுரை மாவட்டம், மருதங்குடி அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் கிருபாகரன் சாமுவேல் தலைமை வகித்தாா். மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் கே.எஸ். நாராயணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள கல்வியின் மாண்பு, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்த கல்வி முறைகள் குறித்துப் பேசினாா்.
தொடா்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.
நிகழ்வில் பள்ளித் தமிழாசிரியை விஜயா, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.