கள்ளழகா் கோயில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்
கள்ளழகா் கோயில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்

கள்ளழகா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.81லட்சம்

Published on

மதுரை மாவட்டம், அழகா்கோவில் கள்ளழகா் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.81லட்சம் கிடைத்தது.

கள்ளழகா் கோயில் உண்டியல்கள் கோயில் துணை ஆணையா் த.செல்லத்துரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையா் சூரியநாராயணன், அறங்காவலா்கள் குழு உறுப்பினா்கள் முன்னிலையில் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

கோயில் கண்காணிப்பாளா்கள் பிரதீபா, பாலமுருகன், அலுவலா்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில் ரொக்கம் ரூ.81 லட்சம் கிடைத்ததாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com