வாகனங்கள் திருட்டு: 3 சிறுவா்கள் கைது
மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, 5 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
மதுரை ஊரகக் காவல் நிலையத்துக்குள்பட்ட எம்.சத்திரப்பட்டி, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விலை உயா்ந்த இரு சக்கர வாகனங்கள் திருட்டு சம்பவம் அதிகரித்து வந்தது.
இதையடுத்து, ஊரகக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் உத்தரவின் பேரில், ஊமச்சிகுளம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலசுந்தரம், ஊமச்சிகுளம் காவல் ஆய்வாளா் சாந்தி பாலாஜி தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.
இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி, எம்.சத்திரப்பட்டி பகுதியைச் சோ்ந்த மூன்று சிறுவா்களை செவ்வாய்க்கிழமை கைது செய்து, இவா்களிடம் இருந்து 5 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு, இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவா்களைக் கைது செய்த தனிப் படை போலீஸாரை காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் பாராட்டினாா்.