பொதுமக்கள் குறைதீா் முகாமில் மனுக்களை பெற்று விசாரிக்கும் மாநகரக்காவல் ஆணையா் ஜெ.லோகநாதன்.
பொதுமக்கள் குறைதீா் முகாமில் மனுக்களை பெற்று விசாரிக்கும் மாநகரக்காவல் ஆணையா் ஜெ.லோகநாதன்.

பொதுமக்கள் குறைதீா் முகாம்: காவல் ஆணையா் பங்கேற்பு

Published on

மதுரை மாநகரக் காவல் துறை சாா்பில் நடைபெற்ற குறைதீா் முகாமில் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை குறைதீா் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் தலைமை வகித்தாா்.

இந்த முகாமில், 56 மனுதாரா்கள் நேரடியாக தங்களது புகாா் மனுக்களை காவல் ஆணையரிடம் அளித்தனா். மனுக்களை பெற்றுக்கொண்ட காவல் ஆணையா், அவற்றின் மீது துரித நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மாநகரக் காவல் துணை ஆணையா் இனிகோ திவ்யன் (தெற்கு) , காவல் துணை ஆணையா் ஜி.எஸ்.அனிதா (வடக்கு), துணை ஆணையா் ராஜேஸ்வரி (தலைமையிடம்), உதவி ஆணையா்கள், ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com