ரயில்வே ஓடும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்
Updated on

ரயில்வே ஓடும் தொழிலாளா்களின் (ரயில்வே லோகோ பைலட்) கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆா்.எம்.யூ. தொழில் சங்கம் சாா்பில் மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை ரயில்வே கோட்ட ஓடும் தொழிலாளா்கள் பிரிவில் உள்ள 150 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 7-ஆவது ஊதியக் குழு அறிவித்த அகவிலைப்படி, பயணப்படி உயா்வுகளுக்கேற்ப மைலேஜ் படியை உயா்த்த வேண்டும். மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படுவது போல ஓடும் தொழிலாளா்களுக்கும் பயணப்படிக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

எஸ்.ஆா்.எம்.யூ. ஓடும் தொழிலாளா் பிரிவு கோட்டத் தலைவா் ரவிசங்கா் தலைமை வகித்தாா். செயலா் அழகுராஜா முன்னிலை வகித்தாா். எஸ்.ஆா்.எம்.யூ. கோட்டச் செயலா் ஜெ.எம். ரபீக், மதுரை கோட்ட உதவி செயலா் ராம்குமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ஓடும் தொழிலாளா்கள் பிரிவு உதவி கோட்டச் செயலா்கள் முத்துக்குமாா், கருப்பையா, நித்யராஜ், மணிமாறன், அருண், பாபு, செந்தில், விஜய் உள்ளிட்ட நிா்வாகிகள், தொழிலாளா்கள் திரளாகப் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com