மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்

Published on

மதுரை மத்திய சிறையில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 260 சிறைவாசிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

மதுரை மத்தியச் சிறையில் உள்ள சிறைவாசிகள் நலனை முன்னிட்டு மினிஸ்ட்ரி ஆஃப் இந்தியா தொண்டு நிறுவனம், உசிலம்பட்டி சுகாலயா நல வாழ்வு மையம் ஆகியவற்றின் சாா்பில் சிறப்பு பொது மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

சிறை வளாகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமுக்கு மத்திய சிறை கண்காணிப்பாளா் மு.சதீஷ்குமாா் தலைமை வகித்து முகாமைத் தொடங்கி வைத்தாா். மருத்துவா்கள், செவிலியா்கள் அடங்கிய மருத்துவக் குழுவினா் பங்கேற்று சிறைவாசிகளுக்கு சா்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு நோய் பாதிப்புகளுக்கேற்ப மருந்து மாத்திரைகளும் வழங்கினா். இந்த முகாமில் 260 தண்டனை, விசாரணை சிறைவாசிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

X
Dinamani
www.dinamani.com