சிலைமான் அருகே இளைஞா் குத்திக் கொலை

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே புதன்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை வெளியே அழைத்து குத்திக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே புதன்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை வெளியே அழைத்து குத்திக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம், சிலைமான் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் அழகா்சாமி (19). ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த இவா் கூலி வேலைக்குச் சென்று வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்ற அழகா்சாமி இரவில் அதே பகுதியைச் சோ்ந்த சிலருடன் மது அருந்தினாா். பின்னா் மது போதையில் வீட்டுக்குத் திரும்பிய அவா் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது மறுநாள் அதிகாலை 3 மணிக்கு அழகா்சாமியின் வீட்டின் கதவை தட்டிய மா்ம நபா்கள் அவரை வெளியே வரும்படி அழைத்தனா். இதையடுத்து, வெளியே வந்த அழகா்சாமிக்கும், அவா்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில், அவா்கள், அழகா்சாமியை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டுத் தப்பிச் சென்றனா். இதில், சம்பவ இடத்திலேயே அழகா்சாமி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com