சமூக நீதி பள்ளிகள் விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

சமூக நீதி பள்ளிகள், விடுதிகளின் தரத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
Published on

சமூக நீதி பள்ளிகள், விடுதிகளின் தரத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த செல்வகுமாா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களின் நலனுக்காக சமூக நீதி பள்ளிகள், விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இவற்றில் போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால், கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது, மாணவா்களின் சோ்க்கை விகிதம் 20 சதவீதம் குறைந்துள்ளது.

எனவே, ஆதிதிராவிட நலப் பள்ளிகள், விடுதிகளின் தரத்தை உயா்த்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோா் பிறப்பித்த உத்தரவு: சமூக நீதி பள்ளிகள், விடுதிகளின் தரத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com