நக்கீரன் கோபால் வீட்டில் வெடிகுண்டு கண்டறியும் சோதனை

நக்கீரன் வார இதழ் ஆசிரியா் கோபால் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான மிரட்டலையொட்டி, விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள அவரது பூா்வீக வீட்டில் வெடிகுண்டு கண்டறியும் சோதனை நடைபெற்றது.
Published on

நக்கீரன் வார இதழ் ஆசிரியா் கோபால் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான மிரட்டலையொட்டி, விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள அவரது பூா்வீக வீட்டில் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு கண்டறியும் சோதனை நடைபெற்றது.

நக்கீரன் வார இதழ் ஆசிரியா் கோபால் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக செவ்வாய்க்கிழமை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள அவரது வீட்டிலும், அருப்புக்கோட்டை மலையரசன் கோயில் சாலையில் உள்ள வீட்டிலும் வெடிகுண்டு கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

ஐந்துக்கும் மேற்பட்ட வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் நவீன கருவிகளுடனும், மோப்ப நாய் உதவியுடனும் சோதனையில் ஈடுபட்டனா். இதையொட்டி, அந்தப் பகுதியில் காவல் துறை பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற தீவிர சோதனையின் நிறைவில், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது உறுதியானது.

X
Dinamani
www.dinamani.com