களஞ்சியம் செயலி: அரசு ஊழியா்கள் கோரிக்கை

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்காக உருவாக்கப்பட்ட ‘களஞ்சியம்’ செயலியை அனைத்து அறிதிறன்பேசிகளிலும் (ஸ்மாட் போன்) செயல்படும் வகையில் மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் க. நீதிராஜா கோரிக்கை விடுத்தாா்.
Published on

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம் முழுவதும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சரண் விடுப்பை ஒப்படைத்து பணப் பலன் பெற விண்ணப்பித்து வருகின்றனா். ஆனால், கருவூலத்தில் மென்பொருளில் இதுவரை ரசீது எடுக்க முடியவில்லை. இந்த மென்பொருளில் நடைமுறைக்கு ஒவ்வாத, முரணான செயல்முறைகள் உள்ளன. இந்த நிலையில், தற்போது அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் முன் பணம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு விண்ணப்பங்களை ‘களஞ்சியம்’ செயலி மூலமே மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கைப்பேசி மூலம் விண்ணப்பிக்கும்போது, ஒரு சில கைப்பேசிகளில் களஞ்சியம் செயலி செயல்படாது என வருகிறது. எனவே களஞ்சியம் செயலி அனைத்து வகை ஸ்மாா்ட்போன்களிலும் செயல்படும் வகையில் மேம்படுத்த வேண்டும்.

எனவே நிதித் துறையும், கருவூலத் துறையும் முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவை நடைமுறைப்படுத்தி பணப் பலன்கள் உரிய காலத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியா்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com