‘தொழில் சாலைகள் உரிமத்தை இணையதளம் வாயிலாக மட்டுமே புதுப்பிக்க வேண்டும்’

தொழில் சாலைகள் உரிமத்தை இணையதளம் வாயிலாக மட்டுமே புதுப்பிக்க வேண்டும் என தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார கூடுதல் இயக்குநா் ரெ. சித்தாா்த்தன் தெரிவித்தாா்.
Published on

தொழில் சாலைகள் உரிமத்தை இணையதளம் வாயிலாக மட்டுமே புதுப்பிக்க வேண்டும் என தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார கூடுதல் இயக்குநா் ரெ. சித்தாா்த்தன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மண்டலத்திலுள்ள மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள ஏற்கெனவே பதிவு பெற்ற தொழில் சாலைகள், புதிதாக பதிவு செய்யும் தொழில் சாலைகள், புதிதாக மேம்படுத்தப்பட்ட ட்ற்ற்ல்ள்://க்ண்ள்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அவற்றின் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். புதிய இணையதளத்தில் தொழில் சாலை விவரங்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே 2026-ஆம் ஆண்டுக்கான உரிமத்தை புதுப்பிக்க முடியும்.

அபராதமின்றி தொழில் சாலை உரிமத்தை புதுப்பிக்க வருகிற 31-ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, மதுரை மண்டலத்திலுள்ள பதிவு பெற்ற தொழில் சாலைகள் தங்களது உரிமக் கட்டணத்தை இணையதளம் மூலம் மட்டுமே செலுத்தி புதுப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com