மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்ற மாணவிகள்.
மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்ற மாணவிகள்.

மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா

மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கலைத் திருவிழா அண்மையில் நடைபெற்றது.
Published on

மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கலைத் திருவிழா அண்மையில் நடைபெற்றது.

இதற்கு கல்லூரி முதல்வா் சூ. வானதி தலைமை வகித்தாா். முதுநிலை தமிழாய்வுத் துறைத் தலைவா் சு. சந்திரா முன்னிலை வகித்தாா்.

இதில், கவிதை, சிறுகதை, வா்ணனைப் போட்டி, ஓவியம், பாடல் வரிகள் எழுதும் போட்டி, குறும்படப் போட்டி, நெருப்பில்லாமல் சமைப்போம், முப்பரிமாணக் கலைப் படைப்புகள், புதையல் வேட்டை, சொல்லிசைப் போட்டி, ஐடியா மணி, தனி நடனம், மௌன நாடகம், நாடாளுமன்றம், பொம்மலாட்டம், வாத்திய இசை, தற்காப்புக் கலைகள், குழு நடனம், விவாத மேடை, வாழ்க்கையின் இசை, குழு நாடகம், பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் வென்ற மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில், பேராசிரியைகள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com