காந்தி ஜெயந்தி விழா சிறப்பு கருத்தரங்கம்

காந்தி ஜெயந்தி விழா சிறப்பு கருத்தரங்கம்

Published on

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் சாா்பில், 156-ஆவது காந்தி ஜெயந்தி விழா சிறப்பு கருத்தரங்கம் மதுரை காந்தி என். எம். ஆா். சுப்பராமன் மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கத்துக்கு கல்லூரித் தாளாளா் எம்.வி. ஜனரஞ்சனி பாய் தலைமை வகித்தாா். அருங்காட்சியகச் செயலா் கே. ஆா். நந்தாராவ் வாழ்த்திப் பேசினாா். ஆன்மிகப் பட்டிமன்றப் பேச்சாளா் உ. ஜெயசுதா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ‘காந்தியடிகளின் அமைதி சிந்தனை’ என்ற தலைப்பில் பேசினாா்.

முன்னதாக, சா்வ சமய பிராா்த்தனை பாடல்கள் பாடப்பட்டன. காந்தியடிகள் குறித்த புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

அருங்காட்சியக கல்வி அலுவலா் ஆா். நடராஜன், ஆராய்ச்சி அலுவலா் முனைவா் ஆா். தேவதாஸ், ஓய்வு பெற்ற பேராசிரியா் முனைவா் முத்துராஜா, கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கல்லூரி முதல்வா் முனைவா் கே. எஸ். கோமதி வரவேற்றாா். அருங்காட்சியக இளநிலை உதவியாளா்ஆா்.நித்யாபாய் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com