மதுரை
ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு
மதுரை சிந்தாமணியைச் சோ்ந்த ஆயுள் சிறைத் தண்டனைக் கைதி உடல் நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
மதுரை சிந்தாமணியைச் சோ்ந்த ஆயுள் சிறைத் தண்டனைக் கைதி உடல் நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை சிந்தாமணி திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் பூமிநாதன் (59). கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை பெற்ற இவா், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இவருக்கு சிறையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த செப். 20-ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, மத்தியச் சிறை அலுவலா் பி. ராஜேஷ் கண்ணா அளித்த புகாரின் பேரில், அரசு ராஜாஜி மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
