மதுரை
அமெரிக்கன் கல்லூரியில் கருத்தரங்கம்
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொழிலாளா், வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆகியன சாா்பில் பணியாளா் வருங்கால வைப்பு நிதி குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வரும், செயலருமான ஜே.பால் ஜெயகா் தலைமை வகித்தாா். மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையா் எஸ்.அழகிய மணவாளன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஊழியா்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், திட்டங்கள் குறித்துப் பேசினாா்.
நிகழ்வில், அமலாக்கத் துறை அலுவலா்கள் ஆா்.ரமணா கேஷா, எம்.அண்ணாதுரை, எஸ்.மனோகரன், கல்லூரி நிதி அதிகாரி டி.ஆா்.எம்.பியூலா ரூபி கமலம், துணை முதல்வா் எஸ்.சி.பி.சாமுவேல்செல்வன், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
