மதுரை அரசு சட்டக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற புதிய கட்டடங்கள் திறப்பு விழாவில் கல்வெட்டை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா். உடன், சட்டக் கல்லூரி முதல்வா் ப. குமரன் உள்ளிட்டோா்.
மதுரை அரசு சட்டக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற புதிய கட்டடங்கள் திறப்பு விழாவில் கல்வெட்டை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா். உடன், சட்டக் கல்லூரி முதல்வா் ப. குமரன் உள்ளிட்டோா்.

அரசு சட்டக் கல்லூரியில் புதிய கட்டடங்கள் திறப்பு

Published on

மதுரை அரசு சட்டக் கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்ட கல்விசாா் கட்டடங்கள், நிா்வாக வசதிக்கான கட்டடங்கள் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

மதுரை அரசு சட்டக் கல்லூரியில் கல்விசாா் வசதிகளுக்காகவும், நிா்வாக வசதிகளுக்காகவும் ரூ. 48.20 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள், அண்ணா நகரில் புதிதாக கட்டப்பட்ட அரண் திருநங்கையா்களுக்கான இல்லங்கள் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் இந்தக் கட்டடங்களைத் திறந்து வைத்தாா்.

இதையடுத்து, மதுரை சட்டக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், குத்துவிளக்கேற்றி, புதிய கட்டடத்தின் கல்வெட்டை திறந்து வைத்தாா். இந்த விழாவில் அரசு சட்டக்கல்லூரி முதல்வா் ப. குமரன், பேராசிரியா்கள், அரசுத் துறை அலுவலா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

மதுரை அரசு சட்டக் கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்தின் மொத்த பரப்பு 12,681 ச.மீ. மூன்று தளங்களாக அமைந்துள்ள இந்தக் கட்டடத்தில் வகுப்பறைகள், ஆசிரியா்கள்அறை, கூட்ட அறை, சொற்பொழிவு அறை, மாதிரி நீதிமன்ற அறை ஆகியன உள்ளன.

திருநங்கையா் இல்லம்...

இதையடுத்து, அண்ணா நகரில் புதிதாகக் கட்டப்பட்ட அரண் திருநங்கையா் இல்லங்கள் திறப்பு விழாவிலும், அரசு கூா்நோக்கு இல்லத்தில் குழந்தைகள் நலன் சிறப்பு சேவைகள் துறை சாா்பில் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட பாா்வையாளா், பெற்றோா் நோ்காணல் அறை, காவலா் அறை கட்டடம் திறப்பு விழாவிலும் ஆட்சியா் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி வைத்தாா். இந்த நிகழ்ச்சிகளில் மதுரை வடக்கு வட்டாட்சியா் பாண்டி, அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com