ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

2003-ஆம் ஆண்டு, ஏப். 1-ஆம் தேதிக்கு பிறகு பணியில் சோ்ந்தவா்களுக்கு பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும்.

இடைநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள், உடல் கல்வி இயக்குநா்கள், ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். கல்லூரிப் பேராசிரியா்களுக்கான பணி மேம்பாட்டு ஊக்க ஊதிய உயா்வு நிலுவையை வழங்க வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் வி.ச. நவநீதகிருஷ்ணன், இரா. தமிழ் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் க. நீதிராஜா ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா். மாநில ஒருங்கிணைப்பாளா் எம். பி. முருகையன் போராட்ட நிறைவுரையாற்றினாா்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் க. சந்திரபோஸ், பா. பாண்டி, மு. பொற்செல்வன், சி. பீட்டா் ஆரோக்கியராஜ், கூட்டமைப்புப் பொறுப்பாளா்கள், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் திரளாகப் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

கோரிக்கைப் பட்டை...

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், கவனத்தை ஈா்க்கும் வகையில் கோரிக்கைப் பட்டை அணிந்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com