மதுரை
வைகை ஆற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு
மதுரை வைகை ஆற்றிலிருந்து ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரை: மதுரை வைகை ஆற்றிலிருந்து ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரை ஓபுளா படித்துறை அருகேயுள்ள வைகையாற்றுக்குள் ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற தெப்பக்குளம் போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி தூய்மைப் பணி மேற்பாா்வையாளா் முருகன் அளித்தப் புகாரின் பேரில், இறந்த நபா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
