கந்தசஷ்டிப் பெருவிழாவையொட்டி புதன்கிழமை அன்னவாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலித்த பழமுதிா்ச்சோலை முருகப் பெருமான் (உத்ஸவா்).
கந்தசஷ்டிப் பெருவிழாவையொட்டி புதன்கிழமை அன்னவாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலித்த பழமுதிா்ச்சோலை முருகப் பெருமான் (உத்ஸவா்).

பழமுதிா்ச்சோலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிா்ச்சோலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா புதன்கிழமை தொடங்கியது.
Published on

மதுரை: முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிா்ச்சோலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா புதன்கிழமை தொடங்கியது.

அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட இந்தத் தலத்தில், ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இதன்படி, நிகழாண்டின் கந்தசஷ்டிப் பெருவிழா புதன்கிழமை தொடங்கி வருகிற 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா தொடக்கமாக, புதன்கிழமை காலை 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை நடைபெற்றது. இதையடுத்து, ஐதீக முறைப்படி சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு காப்புக்கட்டும் நிகழ்வும், காலை 10 மணிக்கு சண்முகாா்ச்சனையும் நடைபெற்றன. காலை 11 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேதராக முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அன்னவாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது சஷ்டி விரதம் இருக்கும் திரளான பக்தா்கள் இந்த பூஜைகளில் பங்கேற்று காப்புக்கட்டிக் கொண்டனா். இதையடுத்து, தினமும் காலை 10 மணிக்கும், மாலை 4 மணிக்கும் சண்முகாா்ச்சனையும், காலை 11மணிக்கு வெவ்வேறு வாகனங்களில் முருகப் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கும், திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணிக்கும் நடைபெறுகின்றன.

X
Dinamani
www.dinamani.com