மாநகராட்சிப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் ரூ.1. 21 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், கழிப்பறைகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

மதுரை: மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் ரூ.1. 21 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், கழிப்பறைகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை அனுப்பானடியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் ரூ.52 லட்சத்தில் 3 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டன. இதேபோல, திரௌபதியம்மன் ஆரம்பப் பள்ளியில் ரூ.20 லட்சத்தில் 2 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், மாநகராட்சி மானகிரி ஆரம்பப் பள்ளியில் தூய்மைப் பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சத்தில் 12 கழிப்பறைகள், செனாய் நகா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ. 18 லட்சத்தில் 4 கழிப்பறைகள் என மொத்தம் ரூ.1.21 கோடியில் கட்டடங்கள் கட்டப்பட்டன.

இந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற இவற்றின் திறப்பு விழாவுக்கு மதுரை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் தலைமை வகித்தாா். துணை மேயா் தி. நாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புதிய கட்டடங்களை திறந்து வைத்தாா்.

இதில், கல்விக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன், துணை ஆணையா் ஜெய்னுலாப்தீன், உதவி ஆணையா் மணிமாறன், கல்வி அலுவலா் ஜெய்சங்கா், மாமன்ற உறுப்பினா்கள் பிரேமா, வசந்தாதேவி, மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com