அண்ணன் கொலை: தம்பி தலைமறைவு

மதுரை சோலையழகுபுரத்தில் சொத்து தகராறு காரணமாக அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி தலைமறைவானாா்.
Published on

மதுரை சோலையழகுபுரத்தில் சொத்து தகராறு காரணமாக அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி தலைமறைவானாா்.

மதுரை சோலையழகுபுரம் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சிக்கந்தா். இவரது மகன்கள் ரகுமான் (30), ஷாஜகான் (28). சகோதரா்கள் இருவரும் கறிக்கடையில் வேலை செய்து வந்தனா். இருவருக்குமிடையே சொத்து தகராறில் விரோதம் இருந்துள்ளது.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமையன்றும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த ரகுமான் வெட்டிக் கொலை செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை இரவு தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் அங்கு சென்று, ரகுமானின் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், சொத்து தகராறில் ஷாஜஹான் கடையில் கறி வெட்டுவதற்குப் பயன்படுத்தும் கத்தியால் அண்ணன் ரகுமானை வெட்டிக் கொலை செய்து விட்டுத் தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com