இடியும் நிலையில் உள்ள கட்டடங்களை அப்புறப்படுத்த அறிவுரை

இடியும் நிலையில் உள்ள கட்டடங்களை அப்புறப்படுத்த அறிவுரை

மதுரை மாவட்டத்தில் இடியும் நிலையில் உள்ள பழைய கட்டடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட வளா்ச்சிப் பணிகள் கண்காணிப்பு அலுவலா் அ. அருண்தம்புராஜ் அறிவுறுத்தினாா்.
Published on

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் மேலும் அவா் பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் 27 இடங்கள் மழைக் காலத்தில் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு 47 நிவாரண மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மழைக் காலங்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் தடையில்லா மின் விநியோகம் வழங்கப்பட வேண்டும். மின்னாக்கிகளில் தேவையான எரிபொருள் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.

பழுதடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிக் கட்டடங்கள் உடனடியாக இடித்து அகற்றப்பட வேண்டும். தனியாருக்குச் சொந்தமான இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த தொடா்புடைய கட்டட உரிமையாளா்களுக்கு குறிப்பாணை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வானதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com