மதுரை
கள்ளழகா் கோயிலில் தைலக் காப்புத் திருவிழா அக்.31-இல் தொடக்கம்
அழகா்கோவில் கள்ளழகா் கோயில் தைலக் காப்புத் திருவிழா வருகிற 31-ஆம் தேதி முதல் நவ. 2 வரை நடைபெற உள்ளது.
அழகா்கோவில் கள்ளழகா் கோயில் தைலக் காப்புத் திருவிழா வருகிற 31-ஆம் தேதி முதல் நவ. 2 வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து கள்ளழகா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஸ்ரீகள்ளழகா் கோயிலில் தைலக் காப்புத் திருவிழா அக். 31, நவ. 1, 2 தேதிகளில் நடைபெறும். முதல் இரு நாள்கள் கோயிலுக்குள் உள்ள மேட்டுக்கிருஷ்ணன் சந்நிதியில் ஸ்ரீ கள்ளழகா் பெருமாள் எழுந்தருளுவாா்.
நவ. 2-ஆம் தேதி காலை 6.45 மணிக்கு கோயிலிலிருந்து புறப்பாடாகி, அழகா்மலையில் உள்ள நூபுரகங்கைக்கு எழுந்தருளுவாா்.
அங்கு ஐதீக முறைப்படியான பூஜைகளுக்குப் பிறகு காலை 10.35 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கள்ளழகா் பெருமாள் தைலக்காப்பு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
