இளைஞா் கொலை: 5 போ் கைது
மதுரையில் முன்விரோதத்தில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை புதுவிளாங்குடி பகுதியைச் சோ்ந்த அன்னக்கொடி மகன் யுவராஜ் (24). கோயம்புத்தூரில் கட்டட வேலை செய்து வந்தாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஷியாம்குமாா், சபா ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்காக மதுரை வந்த யுவராஜ், கடந்த 19-ஆம் தேதி இரவு தனது நண்பா் சித்தனுடன் (19) வீட்டுக்கு முன் நின்று பேசிக் கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த ஷியாம்குமாா், சபா உள்ளிட்ட சிலா் வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் யுவராஜ், சித்தனை வெட்டி விட்டு தப்பிச் சென்றனா். இதில், பலத்த காயமடைந்த இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சித்தன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த சபாபதி (23), ஷியாம்குமாா் (21), விக்னேஷ் (21), சஞ்சய் (20), பிரதாப் (21) ஆகிய 5 பேரும் சித்தனை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 5 பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
